Sinhala (Sri Lanka)English (United Kingdom)
முகப்பு பயிற்சி

பயிற்சி

மின்வலு, சக்தி, தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள், விளையாட்டுக் கழக நலனோம்பல், இளைஞர் அலுவல்கள், சிறுகைத்தொழில்  மற்றும் நெசவுத் தொழில், கிராமவாசிகள் மற்றும் இளைய தலைமுறையினர் மீது விசேட கவனம் செலுத்துதல், பல்வேறு விடயத் துறைகள் மீது பரந்த அறிவு போன்ற விடயங்கள் நிகழ்ச்சித்திட்டங்களின் பயனுறுதிக்கு உறுதுணையாக அமைகின்றன. ஆயினும் பணியாளர் குழாமின் இடமாற்றம் மற்றும் சேவைக்குப் புதிதாகச் சேர்த்துக்கொள்ளல் போன்றவை காரணமாக பயிற்றப்பட்ட உழைப்பினைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் நிலவுகின்றன. நிகழ்ச்சித்திட்டங்களின் நோக்கங்களை இனங்காணல் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு முறையான பயிற்சிகளை அளித்தல் ஆகிய இவ்விரு விடயங்களும் பயனுறுதியும் வெற்றிகரமானதுமான சேவையைப் பெற்றுக்கொள்ளவும் 2010 ஆம் ஆண்டில் மாகாணசபை எதிர்பார்த்துள்ள முன்;னேற்றத்தை அடையவும்  காரணமாக அமையும். இந்நிலைமையை அடைவதன் மூலமாக உத்தியோகத்தர்களுக்கு தொழில் ரீதியான மனநிறைவினைப் பெற்றுக்கொடுக்கவும் சேவை நிலைமைகளை முன்னேற்றவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

  • எஞ்சிய பத்தாண்டுகளுக்குள் மொத்த தேசிய உற்பத்திக்கு மாகாணக் கைத்தொழில் கூறு வழங்கும் பங்களிப்பினை கணிசமான அளவில் அதிகரித்தல்.
  • சிறுகைத்தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை அடுத்த தசாப்தத்தில் மேம்படுத்த உதவுதல்.
  • சிறுகைத்தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு  மாகாணசபை வழங்கும் சேவைகள் பற்றி விழிப்பூட்டுதல்.
  • மாகாணத்தில் கேள்வி நிலவுகின்ற சிறுகைத்தொழில்களைப் புதிதாக ஆரம்பிக்க உதவுதலும் அவர்களின் திறன்களை விருத்தி செய்தலும்.
  • சிறுகைத்தொழில் கூறில்  தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தல்.
  • மாகாணத்தில் நிலவுகின்ற கேள்விக்கு அமைவாக உற்பத்திச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு மாகாணசபையின் ஒத்துழைப்பினை வழங்குதல்.
  • தொழில் வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வருமான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
  • திணைக்களத்தின் கீழுள்ள பயிற்சி நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து முறையான பயிற்சியை வழங்குதல்.
 
ஜனவரி 2020
S M T W T F S
29 30 31 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31 1

The Government Information centerr